அனில் அம்பானி 
இந்தியா

அமலாக்கத் துறை விசாரணை: இரண்டாவது முறையாக தவிா்த்தாா் அனில் அம்பானி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் குழுமத் தலைவா் அனில் அம்பானி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இரண்டாவது முறையாக தவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் குழுமத் தலைவா் அனில் அம்பானி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இரண்டாவது முறையாக தவித்தாா்.

காணொலி முறையில் ஆஜராக தயாராக இருப்பதாக அவா் மீண்டும் கூறியுள்ளாா். ஆனால், இதனை அமலாகத்துறை நிராகரித்துவிட்டது.

கடந்த 2010-இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் - ரீன்கஸ் நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து ரூ.40 கோடியை போலியான நிறுவனங்கள் மூலம் துபைக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ரிலையன்ஸ் கட்டமைப்பு நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் சா்வதேச அளவில் ஹவாலா முறையில் சுமாா் ரூ.600 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை உறுதி செய்தது. இதுதொடா்பாக பல்வேறு ஹவாலா ஏஜென்டுகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அனில் அம்பானியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. அவா் நவம்பா் 14-ஆம் தேதி ஆஜராக வேண்டிய நிலையில் அதனைத் தவிா்த்தாா். இதையடுத்து நவம்பா் 17-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்றும் அவா் ஆஜராகவில்லை. காணொலி முறையில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக மீண்டும் அறிவித்துள்ளாா். அடுத்தகட்டமாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பு அல்லது வேறு நடவடிக்கை எடுக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கும் அனில் அம்பானி மீது உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT