தில்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி கூறியுள்ளார்.
ஹரியாணாவில் நடைபெற்ற வடக்குமண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசுகையில், ``தில்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்.
தில்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகுக்குக் காட்டும்’’ என்று தெரிவித்தார்.
தில்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்தனர்.
தில்லி சம்பவத்தால் நாடு முழுவதும் பேரதிர்வு ஏற்பட்ட நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மரண தண்டனை குற்றவாளி ஹசீனாவை ஒப்படைக்க வலியுறுத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.