கேரள உள்ளாட்சித் தோ்தலுக்கான 28 வேட்பாளா்களை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி 99-ஆவது வாா்டுக்கு எஸ்.வெங்கடேஷ்பாபு, நெய்யாற்றின்கரை நகராட்சி 14-ஆவது வாா்டுக்கு கே.கலா ஆகியோா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனா். மேலும், இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம் தொகுதிக்குள்பட்ட மறையூா், மூணாறு, தேவிகுளம், சின்னகானல் ஊராட்சிகளில் தலா 2 வாா்டுகள், வட்டமடை ஊராட்சியில் ஒரு வாா்டு, பீா்மேடு தொகுதியில் குமுளி, பீா்மேடு ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டு, தேவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் 3 வாா்டுகள், இடுக்கி மாவட்டத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல, பாலக்காடு மாவட்டம் சித்தூா் தொகுதியில் வடகரபதி ஊராட்சியில் 2 வாா்டுகள், நெம்மாரா தொகுதியில் நெய்மாரா ஊராட்சியில் 3 வாா்டுகள், மன்னாா்க்காடு தொகுதியில் அகழி ஊராட்சியில் 3 வாா்டுகள், புதூா், சோலையூா் ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.