இந்தியா

தில்லியில் இன்று ‘சிஎஸ்சி’ நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் மாநாடு

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) அமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) அமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சிஎஸ்சி அமைப்பின் உறுப்பு நாடுகளான மாலத்தீவு, மோரீஷஸ், இலங்கை, வங்கதேச நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்க உள்ளனா். மாநாட்டில் பங்கேற்க செஷல்ஸுக்கு பாா்வையாளா் நாடாகவும், மலேசியாவுக்கு விருந்தினா் நாடாகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சிஎஸ்சி அமைப்பின் 7-ஆவது மாநாடு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், கடல்சாா் பாதுகாப்பு, பயங்கரவாதம், நாடு கடந்த திட்டமிட்ட குற்றங்கள், இணையப் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்புகள் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடா் நிவாரணம் உள்ளிட்டவை குறித்து விவாதிகக்ப்பட உள்ளது. அதோடு, இந்த அமைப்பின் 2026-ஆம் ஆண்டு செயல் திட்ட உருவாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துக்காக இந்த சிஎஸ்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 6-ஆவது தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் மாநாடு 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் மோரீஷஸில் நடைபெற்றது. சிஎஸ்சி அமைப்பின் நிறுவன ஆவணங்களில் கையொப்பமிட கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் உறுப்பு நாடுகள் மீண்டும் கூடின.

அதுபோல, சிஎஸ்சி அமைப்பின் உறுப்பு நாடுகளின் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்கள் மாநாடும் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த மாநாடு கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் காணொலி வழியில் நடைபெற்றது.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT