மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மூன்று மாதங்கள் காலக்கெடு விதித்தது. மேலும், பிரிவு 142-ஐ பயன்படுத்தி மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது.
அதில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றத்தால் காலக்கெடு விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதேபோல், உச்ச நீதிமன்றத்திற்கு மகத்தான அதிகாரத்தை வழங்கும் பிரிவு 142-ஐ மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க பயன்படுத்த முடியாது என்றும் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தை இயக்க முதன்மையான அமைப்பு என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.