பாஜக தலைவர் ஜெய் தோலாகியா ஒடிசா எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
ஓடிசா அவைத் தலைவர் சுராம பதி மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஜெய் தோலாகியாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த விழாவில் அவரது தாயார் கல்பனா தோலாகியா மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
செப்டம்பர் 8ஆம் தேதி அவரது தந்தையும், பிஜேடி எம்எல்ஏவுமான ராஜேந்திர தோலாகியா இறந்ததால் நவம்பர் 11 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் தோலாகியா நுவாபாடா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் காங்கிரஸ் வேட்பாளர் காசிராம் மஜ்ஹியை 83,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பிஜேடி வேட்பாளர் சினேகாங்கினி சுரியா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் தோலாகியாவின் வருகையுடன் பாஜகவின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பிஜேடியின் எண்ணிக்கை 50 ஆகக் குறைந்துள்ளது. காங்கிரசில் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், மூன்று சுயேச்சைகள், ஒருவர் சிபிஐ(எம்)-ஐச் சேர்ந்தவர்.
நுவாபாடா இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தலைமையிலான 17 மாத கால அரசை ஆதரிப்பதாகக் கருதப்படுகிறது. ஜெய் தோலாகியாவின் வெற்றி நுவாபாடாவில் தோலாகியா குடும்பத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் நாளை முதல் 6 நாள்களுக்கு கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.