வான்கூவரில் இருந்து தில்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் நெஞ்சுவலி காரணமாக பலியானார்.
கனடாவின் வான்கூவரில் இருந்து தலைநகர் தில்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் நேற்றிரவு வந்துகொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த தில்லியைச் சேர்ந்த தல்பீர் சிங்(70) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அந்த விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு தரையிறங்கியது.
விமானத்தில் இருந்து தல்பீர் சிங் இறக்கிவிடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உடல் கூராய்வுக்காக ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே விமானம் 176 பயணிகளுடன் மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.