பயணிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.
தலைநகர் தில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை காலை விஜயவாடாவுக்கு புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த வயதான பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. பிறகு விமானத்திலிருந்து அந்த பயணி இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் உடனடியாக தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.