ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் 2025 - 2026 ஆண்டறிக்கையில் ரூ. 15,000 கோடி நஷ்டத்தை பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணங்களாக அகமதாபாத் விபத்து, இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட உலகளாவிய மோதல்களால் வான்வெளி மூடல் உள்ளிட்டவையை அந்நிறுவனம் மேற்கோள் காட்டவுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 240-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து விமானங்களும் சோதனை செய்யப்பட்டதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் மோதல், இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டதாலும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக வருகின்ற மார்ச் மாதம் தாக்கல் செய்யவுள்ள ஆண்டறிக்கையில் சுமார் 1.6 பில்லியன் டாலர் (ரூ. 15,000 கோடி) நஷ்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்த நிதியாண்டில் செயல்பாட்டு ரீதியாக நஷ்டமில்லா நிலையை அடைய இலக்கு நிர்ணயித்திருந்தது, ஆனால் தற்போது லாபம் ஈட்டுவதே சாத்தியமற்றதாகிவிட்டது என்று அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக எவ்வித கருத்துகளையும் அதிகாரப்பூர்வமாக டாடா குழுமம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.