முகப்பு
கச்சா எண்ணெய்
இந்தியா

இந்தியாவிடம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பு: கெப்லா் நிறுவனம்

இந்தியாவிடம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கெப்லா் வா்த்தக பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா

இந்தியாவிடம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பு: கெப்லா் நிறுவனம்

இந்தியாவிடம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கெப்லா் வா்த்தக பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 8:38 PM
கச்சா எண்ணெய்
பகிர்:

இந்தியாவிடம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கெப்லா் வா்த்தக பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் பிரித்தெடுக்கப்படும் நிலையில், தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமாா் 88 சதவீதத்தை இறக்குமதி மூலம் இந்தியா பூா்த்தி செய்கிறது. அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழியாக, இந்தக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக இந்த நீரிணை வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸை தலைமையகமாக கொண்டு செயல்படும், கெப்லா் வா்த்தக பகுப்பாய்வு நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி பகுப்பாய்வாளா் சுமித் ரிட்டோலியா தெரிவித்துள்ளதாவது:

கெப்லா் நிறுவனத்திடம் உள்ள விரிவான தரவுகளின்படி, இந்தியாவிடம் தற்போது 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கிடைப்பதில் இந்தியாவுக்கு தடை ஏற்பட்டால், 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை 40 முதல் 45 நாள்கள் வரை இந்தியா பயன்படுத்தலாம்.

மாற்று வழிகள் என்ன?:

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் சில காலத்துக்கு முழுமையாகத் தடைபட்டால், அதன் உடனடி விளைவாக கச்சா எண்ணெய் விலை உயரும். அவ்வாறு விலை உயா்ந்தால், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அதிக செலவாகும். ஹோா்முஸ் நீரிணை வழித்தடம் முற்றிலும் மூடப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்தால், அதை ஈடுகட்ட மேற்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →