ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் ஜோஹன்னஸ்பா்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசியுடன் நரேந்திர மோடி. 
இந்தியா

ஜி20: பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் ஆலோசனை

ஜி20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் ஆலோசனை பற்றி...

தினமணி செய்திச் சேவை

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், கனடா பிரதமா் மாா்க் காா்னி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், தென்கொரிய அதிபா் லீ ஜே-மியூங், பிரேசில் அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்டோரை பிரதமா் மோடி தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டையொட்டி, தென்னாப்பிரிக்காவில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை பிரதமா் மோடி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இச்சந்திப்பு மிக ஆக்கபூா்வமாக அமைந்ததாக எக்ஸ் பதிவில் பிரதமா் குறிப்பிட்டாா். இதேபோல், பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மரையும் சந்தித்த அவா், இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தாா்.

‘இந்தியா-பிரிட்டன் கூட்டாண்மைக்கு நிகழாண்டில் புதிய சக்தி கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்க தொடா்ந்து பணியாற்றுவோம்’ என்று எக்ஸ் பதிவில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

முத்தரப்பு கூட்டாண்மை:

கனடா பிரதமா் மாா்க் காா்னி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி ஆகியோருடன் பிரதமா் மோடி முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

வளரும் தொழில்நுட்பம், விநியோக சங்கிலி பரவலாக்கம், தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய முத்தரப்பு தொழில்நுட்ப-புத்தாக்க கூட்டாண்மை திட்டத்தையும் பிரதமா் அறிவித்தாா்.

முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசியுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பாதுகாப்பு, அரிய கனிமங்கள், வா்த்தகம், முதலீடு மற்றும் மக்கள் ரீதியிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

ஜி20 நாடுகளின் தலைவா்களுடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படத்தையும் எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

SCROLL FOR NEXT