விமானம் புறப்பட சிறிது நேரம் இருக்கும் நிலையிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்ய நேர்ந்தால், விமான டிக்கெட் கட்டணத்தில் 80 சதவிகிதத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு விரைவில் வருகிறது.
இந்தியாவில், விமானச் சேவைக்காக உருவாக்கப்படும் பயணக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம், ரத்து செய்யப்படும் விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை பயணிகளுக்கு திரும்பத் தருவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போதைக்கு, விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், கட்டணம் திரும்பக் கிடைக்காது. ஆனால், பயணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதனால் ரத்து செய்யப்பட்டால் மட்டும் விமான சேவை நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்கி வருகின்றன. ஆனால், அது நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமையாக உள்ளன.
தற்போது, இந்திய விமான சேவை நிறுவனங்களுடன், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி, உள்நிர்வாகத் தயாரிப்புடன் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதாவது, இந்த காப்பீட்டுத் தொகையை பயணிகளிடமிருந்து வசூலிக்காமல், விமான சேவை நிறுவனங்கள் செலுத்துவதா அல்லது தேவைப்படும் பயணிகள் மட்டும் காப்பீட்டுத் தொகையை செலுத்தி இந்த சேவையை பெறுவதா என்ற கோணத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், பயணம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்து, முன்பதிவு செய்து, ரத்து செய்தால், பணம் பறிபோகுமே என்ற அச்சம் காரணமாக, முன்பதிவு செய்ய தயங்குவது குறையும். அச்சம் இல்லாமல், மக்கள் விமான டிக்கெட்டுகளை அதிகளவில் முன்பதிவு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க.. 10 கோடி பார்வைகளைக் கடந்த ஊறும் பிளட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.