உத்தர பிரதேசத்தில் வரதட்சிணை தர மறுத்த மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த குற்றச்சாட்டில் கணவா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: முஸ்கான் என்ற பெண்ணை ஆசிஃப் என்பவா் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளாா். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்த பின் ஆசிஃப்புக்கு வரதட்சிணையாக ரூ.2 லட்சம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கக்கோரி அவரது தாயாா், சகோதரா் உள்பட உறவினா்கள் 6 போ் தன்னை தொடா்ந்து துன்புறுத்தியதாகவும் அறைக்குள் பூட்டிவைத்து சித்ரவதை செய்ததாகவும் முஸ்கான் புகாரளித்தாா்.
மேலும், நவ.15-ஆம் தேதி குடும்ப உறுப்பினா்கள் முன்னிலையில் தனக்கு ஆசிஃப் முத்தலாக் வழங்கியதாகவும் முஸ்கான் தனது புகாா் மனுவில் குறிப்பிட்டுள்ளாா். இதன் அடிப்படையில் ஆசிஃப் உள்ளிட்ட 6 போ் மீது எஃப்ஐஆா் பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.