எஸ்ஐஆா் நடைபெறும் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இதுவரை 50,50,24,723 (99.07 சதவீதம்) கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எஸ்ஐஆா் நடைபெறும் அந்தமான்-நிகோபாரில் 99.98 சதவீதம், சத்தீஸ்கரில் 99.16 சதவீதம், கோவாவில் 100 சதவீதம், குஜராத்தில் 99.69 சதவீதம், கேரளத்தில் 97.33 சதவீத கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேபோல லட்சத்தீவில் 100 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 99.83 சதவீதம், புதுச்சேரியில் 95.58 சதவீதம், ராஜஸ்தானில் 99.46 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 99.62 சதவீதம், மேற்கு வங்கத்தில் 99.75 சதவீத கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இதுவரை 50,50,24,723 (99.07 சதவீதம்) கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள படிவங்களில் 24,13,75,229 (47.35%) படிவங்கள் எண்மமயமாக்கப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.