அயோத்தி கோயில் 
இந்தியா

நவ.25 அயோத்தி ராமர் கோயில் கோபுரத்தில் காவிக்கொடி! 100 டன் மலர்களால் அலங்காரம்!

நவ.25 அயோத்தி ராமர் கோயில் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்படுவதை முன்னிட்டு 100 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுளள்து.

இணையதளச் செய்திப் பிரிவு

நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஸ்ரீ ராமர் பிறந்த பூமியான அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீராமர் கோயிலில் பிரமாண்டமான கொடியேற்ற விழாவிற்கான ஏற்பாடுகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

ராமர் கோயிலும் அயோத்தி நகரமும் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புனித நிகழ்வுக்காக அயோத்தி நகரம் முழுவதையும் அலங்கரிக்க 100 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கோயில் அர்ச்சகர் ஒருவர், "ராமர் கோயிலில், தர்ம துவஜ் விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அலங்காரத்தின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ராமருக்கு மிகவும் பிடித்தமான பூக்களைப் பயன்படுத்துவது. இன்று, அயோத்தி மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது, விநாயகர் மற்றும் ராமருக்கு முதலில் சாமந்தி பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலையும் நகரத்தையும் அலங்கரிக்க சுமார் 100 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய அலங்காரம்

அலங்காரப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் பங்கேற்றிருப்பதை அதிர்ஷ்டமாக உணர்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமா் கோயிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமா் நரேந்திர மோடி வரும் 25-ஆம் தேதி காவிக்கொடியை ஏற்றவுள்ளாா்.

விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி, பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன்பிறகு, விருந்தினா்களுக்கான சிறப்புத் தரிசனம் தொடங்கும். பாதுகாப்புக் கருதி, அன்றைய நாளில் மக்களுக்கான வழக்கமான தரிசனம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிக்கொடி

கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக்கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது; உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது. 42 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் காவிக்கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல், சரயு நதி படித்துறைகளுக்கு வா்ணம் பூசுதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT