கர்நாடகத்தில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்பில் கார் மோதியதில் நால்வர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,
மாலூர் தாலுகாவில் உள்ள அபேனஹள்ளி கிராமத்தில் அதிகாலை 2.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய அனைவரும் நண்பர்கள். கேரளத்தில் உள்ள சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி ஓட்டுநர் அதிக வேகத்தில் கார் ஓட்டியதால், மேம்பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்பில் வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்கத்தின் காரணமாக கார் கிட்டத்தட்ட 100 மீட்டரில் உள்ள சுரங்கப்பாதையில் விழுந்து சம்பவ இடத்திலேயே நால்வரும் உயிரிழந்தனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Four Sabarimala pilgrims were killed after their car, which was allegedly overspeeding, hit the side barrier of a flyover and fell into an underpass in this district here in the wee hours of Monday, police said.
இதையும் படிக்க: சேலத்தில் தொடரும் சாரல் மழை: பள்ளி மாணவர்கள் அவதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.