பிகாரில் பள்ளி வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர்.
பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் அமனூர் - தராய் நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது எஸ்யுவி ரக கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பள்ளி வேனில் பயணித்த 15 குழந்தைகளும் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய குழந்தைகளை அருகிலிருந்தோர் மீட்டு சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து இரு வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: லாக் அப் மரணங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: உச்ச நீதிமன்றம் காட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.