புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில், நீதிபதி சூர்ய காந்த் உச்ச நீதிமன்றத்தின் வழக்கத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.
தனி நபர் சுதந்திரம் அல்லது உடனடி மரணதண்டனை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தவிர, வாய்மொழியாகக் குறிப்பிட்டு அதே நாளில் வழக்குகளைப் பட்டியலிடும் அவசர நடைமுறை இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று சூர்ய காந்த் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தான் பதவியேற்ற முதல் நாளிலேயே, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.
அரதன்படி, இனி வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரணைப் பட்டியலில் இணைக்கும் நடைமுறை கிடையாது என்பதே.
ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் எந்தெந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று பட்டியலிடப்படும். ஆனால், வழக்குகளின் அவசர நிலை கருதி, வழக்குரைஞர்கள் முறையீடு செய்து பட்டியலில் அவசரம் என்று குறிப்பிட்டு சில வழக்குகள் அவசர வழக்காக விசாரிக்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இந்த நடைமுறை கிடையாது என்று நீதிபதி சூர்ய காந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது, தனி நபர் சுதந்திரம் தொடர்பான வழக்குகளில், குறிப்பிட்ட காரணத்தை எழுத்துப்பூர்வ கடிதமாக கொடுத்தால் அந்த வழக்குகள் அவசர வழக்குகளாக பட்டியலில் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.