வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்துதல் கூடாது என்று கேரள அமைச்சர் சிவன்குட்டி அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படும் நிலையில், தேர்வு நேரங்களில் மாணவர்களின் படிப்பும் சீர்குலையும் என்று மாநில பொதுக் கல்வியமைச்சர் சிவன்குட்டி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ``வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகளில் என்எஸ்எஸ் மற்றும் என்சிசி தன்னார்வ மாணவர்கள் நியமித்தல் வேண்டும் என்ற கோரிக்கையால் மாணவர்களின் படிப்பு சீர்குலையும்.
பொதுத் தேர்வுகள் உள்பட முக்கியமான தேர்வுகள் நெருங்குகிற வேளையில், மாணவர்களை 10 நாள்களுக்குமேல் வகுப்புகளுக்கு வரவிடாமல் தடுத்து, எஸ்ஐஆர் பணிகளில் நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்களின் படிப்பு நேரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது. என்எஸ்எஸ் மற்றும் என்சிசி ஆகியவை பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் மற்றும் சமூக சேவையை ஊக்குவிப்பவை. அதேவேளையில், மாணவர்களை அலுவலகப் பணி, களாப்பணிகளில் ஈடுபடுத்தி, பள்ளி நாள்களில் தொடர்ந்து வகுப்புகளைத் தவறவிடுவதும் சரியான நடைமுறை அல்ல.
கல்வி நோக்கங்களைத் தவிர வேறு எந்த அலுவலகப் பணிகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது அவர்களின் கல்வி உரிமையை மீறுவதாகும்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: எஸ்ஐஆர்! சர்வதேச எல்லைப் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி கேள்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.