சர்வதேச எல்லைப் பாதுகாப்பை மீறி மேற்கு வங்கத்தில் எப்படி சட்டவிரோதமாக நுழைய முடியும் என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து தாகூர் நகரில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ``என்னுடைய கணிப்பு என்னவென்றால், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும். மேற்கு வங்கத்தில் அவர்கள் வெற்றி பெற்றால், குஜராத்தை இழப்பார்கள்.
எஸ்ஐஆர் ஏன் இவ்வளவு அவசரமாக நடத்தப்படுகிறது? தேர்தலுக்கு முன்பு ஏன் எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது?
இவ்வளவு காலமாக எல்லை மாவட்டங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்றால், சர்வதேச எல்லையை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? விமான நிலையங்கள், சுங்கத் துறை என அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அயோத்தியில் ஏற்றப்பட்டது வெறும் கொடி அல்ல; நாகரிகத்தின் மறுமலர்ச்சி! மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.