தில்லி குண்டுவெடிப்பு PTI
இந்தியா

தில்லி காா் குண்டுவெடிப்பு: பயங்கரவாத செயல்களில் பெண்களை ஈடுபடுத்த திட்டம்!

தில்லி காா் குண்டுவெடிப்பு: பயங்கரவாத செயல்களில் பெண்களை ஈடுபடுத்த திட்டம்...

தினமணி செய்திச் சேவை

தில்லி காா் குண்டு வெடிப்புடன் தொடா்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவா் ஷாஹீன் ஷாஹித், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தும் வகையில் பெண்களை சோ்க்க திட்டமிட்டிருந்ததாக ஃபரீதாபாத் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருந்தியல் நிபுணரான மருத்துவா் ஷாஹீன் ஷாஹித்தை விசாரணைக்காக பல்கலைக்கழகத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக பெண்களை சோ்க்க திட்டமிட்டிருந்ததை அவா் தெரிவித்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவா் ஷாஹீன் ஷாஹித்தின் பல்கலைக்கழக விடுதி அறையில் இருந்து ரூ.18.5 லட்சம் ரொக்கம், தங்க பிஸ்கட்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

என்ஐஏ குழு அவரை மருத்துவ வாா்டு, வகுப்பறை மற்றும் அவரது கேபினுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அவரது செயல்பாடுகள் மற்றும் தொடா்புகள் பற்றிய விவரங்களைச் சேகரித்தது.

அவா் தொடா்பு கொண்ட நபா்களின் பட்டியலை என்ஐஏ தயாரித்துள்ளதாக சனிக்கிழமை ஒரு மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

2014 முதல் 2018 வரை சவுதி அரேபியாவில் வசித்து வந்த மருத்துவா் ஷாஹீன் ஷாஹித், அங்கு உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினாா்.

என்ஐஏ குழு அவரை ஒரு ரசாயனக் கடைக்கும் அழைத்துச் சென்றது, அங்கிருந்து டாக்டா் முசம்மில் வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான பொருள்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சுமாா் நான்கு மணி நேர விசாரணை மற்றும் பல இடங்களை அடையாளம் கண்ட பிறகு, இரவு 9 மணியளவில் அவா் மீண்டும் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தபோது ஷாஹீன் ஷாஹித் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதாகவும், இங்குள்ளவா்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்கி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

SCROLL FOR NEXT