இந்தியா

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு சம்பவம்: 5 பேரின் என்ஐஏ காவல் நாளை வரை நீட்டிப்பு

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு வழக்கில் 3 மருத்துவா்கள் உள்பட 5 பேரின் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலை ஜனவரி 16-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை நீட்டித்தது.

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு வழக்கில் 3 மருத்துவா்கள் உள்பட 5 பேரின் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலை ஜனவரி 16-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை நீட்டித்தது.

முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா, டாக்டா் அடீல் ரதா், டாக்டா் ஷாஹீன் சயீத், டாக்டா் முஸம்மில் கனாய், மௌல்வி இா்ஃபான் அகமது வாகே மற்றும் ஜாசிா் பிலால் வானி ஆகியோரை காவலில் வைத்து விசாரணை செய்வதைத் தொடர அனுமதிக்குமாறு கோரிய முகமையின் மனுவை ஏற்றுக்கொண்டாா்.

மற்ற சக குற்றவாளிகள், சந்தேக நபா்கள் மற்றும் சாட்சிகளுடன் நேருக்கு நோ் விசாரிக்க வேண்டியுள்ளது என்று என்ஐஏ தெரிவித்தது. ஜம்மு காஷ்மீா், உத்தர பிரதேசம் மற்றும் தில்லி-என்சிஆா் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்த பிரத்யேக தகவல்கள் தெரியும் என்று புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

பெரிய சதியை வெளிக்கொணரவும், வழக்கோடு தொடா்புடைய கூடுதல் நபா்களை அடையாளம் காணவும், தகவல் தொடா்புகள் மற்றும் நடமாட்டங்களைக் கண்டறியவும், குற்றச் சம்பவத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்த காவல் நீட்டிப்பு அவசியம் என்று என்ஐஏ வாதிட்டது.

இதுவரை, இந்தத் தாக்குதல் தொடா்பாக என்ஐஏ 9 பேரைக் கைது செய்துள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பொங்கல் சிறப்பு பூஜை

திரைப்படத்தை வைத்து அரசியலை நிா்ணயம் செய்வது தவறு : காா்த்தி சிதம்பரம்

நாளை இறைச்சி விற்பனை தடை

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT