நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதம் 1-ம் தேதியன்று முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகின்றது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
நடப்பாண்டு ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ. 2.37 லட்சம் கோடி வசூலானது. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் ரூ. 1.89 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.
2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே கடந்த மாதம், வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
எனவே, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் தாக்கம் அடுத்த மாத ஜிஎஸ்டி வசூலில் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.