பிரதிப் படம் ENS
இந்தியா

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

இணையதளச் செய்திப் பிரிவு

தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 மே மாதத்தில் தொடங்கப்பட்டு, 19 கோடிக்கும் மேற்பட்ட வலைத்தள வருகைகளையும், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் பயன்பாட்டு பதிவிறக்கங்களையும் (App) சஞ்சார் - சாத்தி தளம் பதிவு செய்துள்ளது.

சஞ்சார் - சாத்தியின் மூலம் மீட்கப்படும் கைப்பேசிகளின் மீட்பு விகிதம், மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. 2025 ஜனவரியில் 28,115-ஆக இருந்த கைப்பேசிகள் மீட்பு, ஆகஸ்ட்டில் 45,243-ஆக உயர்ந்தது. 8 மாதங்களில் 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

6 லட்சம் கைப்பேசிகள் மீட்பின் மூலம், லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் கூறுகிறது.

இதையும் படிக்க: பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

Over 6 lakh lost and stolen mobile handsets recovered with help of DoT's Sanchar-Saathi app

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT