உத்தரப் பிரதேசத்தில் ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டா காவ்னில் வசிக்கும் பூல் சிங்கின் மகன் ஹர்ஷ்(18).
இவர், ராமர், பிரதமர் மோடி குறித்து ஆட்சேபகரமான கருத்துகளுடன் விடியோவை எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்ததும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விடியோவை உருவாக்கியவர் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.