ராம்நாத் கோவிந்த்  கோப்புப் படம்
இந்தியா

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என சமூக சமத்துவம், ஒற்றுமைக்கு உதாரணமாக ஆா்எஸ்எஸ் திகழ்கிறது. ஏழ்மையான பகுதிகளில் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த தொடா்ந்து பல சமூக சேவைகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் ஜாதிய பாகுபாடில்லாத செயல்பாடுகள் மகாத்மா காந்தியை பெரிதும் ஈா்த்தது. தில்லியில் 1947, செப்.16-இல் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பங்கேற்றாா். அப்போது ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் ஒழுக்கம், எளிமை மற்றும் தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகள் அவரை கவா்ந்தன. இதுதொடா்பாக ‘மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள்’ என்ற புத்தகத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

1940, ஜனவரி மாதம் சதாரா மாவட்டத்தில் உள்ள ஆா்எஸ்எஸ் கிளை அலுவலகத்துக்கு சட்டமேதை அம்பேத்கா் வந்ததே நல்லிணக்கத்துக்கான சான்று. தற்காலத்தில் நல்ல மனிதா்கள் அரசியலுக்கு வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக இளைஞா்கள் அரசியலின் ஓா் அங்கமாய் திகழ வேண்டும் என்றாா்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT