அசாம் இசைக் கலைஞர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூரில் மரணமடைந்த நிலையில், அவர் ஸ்கூபா டைவின் செய்தபோது மரணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அவர் ஸ்கூபா டைவிங் செய்தபோது இறந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இறக்கும் போது பதிவான விடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தவர், உயிர்காக்கும் கருவிகளுடன் கர்க் ஸ்கூபா டைவிங் சென்றார். பிறகு, அவர் மேலே வந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு தனது லைஃப் ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டு மீண்டும் தண்ணீரில் குதித்ததாகக் கூறியிருக்கிறார். அது தொடர்பான விடியோ ஒன்றும் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், அவர் ஸ்கூபா டைவிங் போது மரணமடையவில்லை என்றும், தண்ணீரில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் மிகப் பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அசாமைச் சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க்.
இவர் கடந்த மாதம் சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, அங்கு ஸ்கூபா டைவிங் செய்ததாகவும், அப்போது அவர் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் அங்கு தண்ணீரில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோதுதான் மரணமடைந்ததாக தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்க்கின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் உடல் கூராய்வு அறிக்கையின் நகலை இந்திய அரசுக்கு, சிங்கப்பூர் காவல்துறை வழங்கியிருக்கிறது.
கடந்த செப்.19-ஆம் தேதி சிங்கப்பூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது ஸ்கூபா டைவிங் செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் காவல்துறையும், 52 வயதான கார்க்கின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றுதான் தெரிவித்திருந்தது.
மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அளித்திருக்கும் அறிக்கையில், கர்க் மரண விவகாரத்தில் அவரது உடலை கூராய்வு செய்த அதிகாரியால், அவர் நீரில் மூழ்குவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை வெளிப்படுத்தக்கூடும் என்று சிங்கப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியின் விசாரணையின் மூலம் இறந்தவரின் அடையாளம், மரணம் எப்படி, எப்போது, எங்கு நடந்தது என்பதைக் கண்டறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த வழக்கில், மர்ம மரணம் என்ற சொல்லுக்கு அடிப்படை இல்லை என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கை, கர்க் கொலை செய்யப்பட்டார் அல்லது சில குற்றவியல் சம்பவங்கள் விளைவாக இறந்தார் என்று சந்தேகிக்கவில்லை என்று குறிப்பிடுகிறது.
செப்.19ஆம் தேதி, செயின்ட் ஜான்ஸ் தீவுப் பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு கர்க் அழைத்துச் செல்லப்பட்டார். நினைவிழந்த நிலையில் தான், அவர் தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க... இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.