கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வருகையின்போது, கரூர் சம்பவத்தைப்போல எதுவும் நேர்ந்திரக் கூடாது என்பதில் கேரள அரசு கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் நவம்பர் 12 முதல் 18 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கலந்துகொள்ள நிலையில், அவர் வருகையின்போது அதிகளவிலான கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்றும் அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
களூரில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் சர்வதேச நிகழ்ச்சியைத் தவிர, சாலை நிகழ்ச்சிகள், ரசிகர்கள் சந்திப்பு போன்றவற்றுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிருப்பதாகக் கூறப்படுகிறது. மைதானத்தில் 60,000 பேர் இருப்பார்கள் என்றும், அதனைவிட அதன் வளாகத்தில் அதிகமானோர் இருப்பர் என்றும் கணிக்கப்படுகிறது. இருப்பினும், கூட்டத்தை திறம்படத் திட்டத்துடன் நிர்வகிக்க முடியும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
கொச்சி விமான நிலையம், அணியினர் தங்கும் விடுதிகள் முதல் மைதானம் வரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைப் போல எதுவும் நேர்ந்திடக் கூடாது என்பதில் கேரள அரசு முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கேரளத்தில் கூட்ட நெரிசல் சம்பவம் என்பது புதிதல்ல என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. 1999-ல் சபரிமலையில் மகரவிளக்கு திருவிழா கூட்ட நெரிசல், 2011-ல் புல்லுமேடு கூட்ட நெரிசல், 2016-ல் புட்டிங்கல் வாணவேடிக்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னதாக குசாட்டில் இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஆகியவற்றையைக் கூறலாம்.
இதையும் படிக்க: ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை - வெளியான திடுக் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.