நரேந்திர மோடி / பி.ஆர். கவாய்  கோப்புப் படங்கள்
இந்தியா

பி.ஆர். கவாய் உடன் பேசிய பிரதமர் மோடி! தாக்குதலுக்கு கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தொடர்புகொண்டு பேசினேன்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைத்து இந்தியர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்ட நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

PM Modi spoke to BR Gavai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவையில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை

கரூா் சம்பவம்: ஆட்சியா், எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக மனு

கார் விற்பனையில் உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ்

மேற்கு வங்கம்: பாஜக எம்.பி., எம்எல்ஏ மீது கல்வீசி தாக்குதல்: ரத்தக் காயங்களுடன் மீட்பு

போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் முரசு கொட்டி போராட்டம்

SCROLL FOR NEXT