பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு விசாரணைக்காக அஸ்ஸாம் போலீஸார் சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தப் போவதில்லை என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
வடகிழக்கு இந்திய கலாசார விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்த ஸுபீன் கர்க் அங்கு கடலில் குளிக்கும்போது உயிரிழந்தார். செப். 19-இல் வெளியான ஸுபீன் கர்க்கின் மரணச் செய்தி, உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான அவரது ரசிகர்களை மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் திணறச் செய்துள்ளது.
இந்த நிலையில், அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூருக்கு அவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ஸுபீன் கர்க்கின் மேலாளருமான சித்தார்த் சர்மா மற்றும் ஸ்பீன் கர்க்கின் இசைக் குழுவைச் சேர்ந்த இருவர்- ஷேகர் ஜோதி கோஸ்வாமி, அம்ரித்பிரபா மஹாந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸுபீன் கர்க்கை விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களுடன் இன்று(அக். 6) பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவிடம் ஸுபீன் கர்க் வழக்கு விசாரணை குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், இந்த வழக்கு விசாரணைக்காக அஸ்ஸாம் போலீஸார் சிங்கப்பூருக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.