மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சார்ட் மார்லெஸின் அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக். 8) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்குச் சென்றடைந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதுபற்றி, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அரசு முறைப் பயணமாக சிட்னி சென்றடைந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இந்தியத் தூதர் கோபால் பாக்லே வரவேற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், இருநாட்டு பாதுகாப்புத் துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் முக்கிய தலைவர்களையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தங்கம் விலை ரூ. 1 லட்சம் தொடும்? குறைய வாய்ப்பு உண்டா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.