கடந்த 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் முதன்முறையாக வானில் பறந்து கனவை நனவாக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையில் ரூ. 19,650 கோடி மதிப்பில் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், நவி மும்பையில் பல்வேறு திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.
நகரின் முதல் நிலத்தடி பாதை வழியாக தெற்கு மற்றும் மத்திய மும்பையை இணைக்கும் புதிய மெட்ரோ பாதையின் இறுதிக் கட்டப் பணிகளை நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக நவி மும்பை விமான நிலையம் இருக்கும். மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்கக் கூடிய நகரம் முழுவதும் நிலத்தடி மெட்ரோவை தொடங்குவது பெரிய சாதனை.
நவி மும்பையில் 1,160 ஹெக்டர் பரப்பளவில், இந்தியாவின் தேசிய மலரான தாமரையை ஒத்திருக்கும்வகையில் விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 2 கோடி பயணிகளும், வரும் ஆண்டுகளில் 9 கோடி பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக வானில் பறந்து, தங்கள் கனவுகளை நனவாக்கியுள்ளனர்.
மும்பை பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல; இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்று என்பதால்தான், பயங்கரவாதிகள் மும்பையை தாக்கினர். காங்கிரஸின் பலவீனம்தான், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பைவிட வேறேதும் முக்கியமில்லை’’ என்று தெரிவித்தார்.
தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மகன் ஜீத் அதானியுடன் பிரதமர் மோடி, விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார்.
இதையும் படிக்க: மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.