பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 8.5 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இந்தியா

பிகார் தேர்தல் பணிகளில் 8.5 லட்சம் அதிகாரிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

8.5 லட்சம் அதிகாரிகள் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில், சுமார் 8.5 லட்சம் தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் வரும் நவம்பர் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சுமார் 243 தொகுதிகளில், 2 கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலானது, வரும் நவம்பர் 6 ஆம் தேதியன்று தொடங்குகின்றது.

பிகாரில், வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதற்கட்டமாக 121 சட்டமன்றத் தொகுதிகளிலும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று; தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளில் சுமார் 8.5 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரள சட்டப்பேரவையில் அமளி! 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

It has been reported that around 8.5 lakh election officials will be deployed for the upcoming assembly elections in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

பூதலூரில் 38 மி.மீ. மழை

பிணைக் கைதிகள் விடுவிப்பு; தற்காலிக போா் நிறுத்தம் ஹமாஸ் - இஸ்ரேல் ஒப்புதல்

இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டக் குழு கூட்டம்

பேராவூரணியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT