நவி மும்பை பகுதியில் திறக்கப்பட்டிருக்கும் சர்வதேச விமான நிலையத்தின் உருவாக்கில் இருந்த மிகப்பெரிய சவால்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உலகிலேயே அதிகம் நெருக்கடி கொண்ட நகரமாக இருக்கும் மும்பைக்கு, இரண்டாவது விமான நிலையம் கிடைத்துவிட்டது.
ஏற்கனவே, லட்சக்கணக்கான பயணிகளுடன் திணறிக் கொண்டிருந்த மும்பை விமான நிலையத்துக்கு ஒரு மாற்றாக இந்த நபி மும்பை விமான நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு நீண்ட வரிசை கிடையாது, அதிக விமானங்களுடன் மிக அழகாகத் தொடங்கும் பயணம் முன்பெப்போதையும் விட மிகச் சிறப்பாக முடியும் என்று வர்ணிக்கிறார்கள் விமானப் போக்குவரத்துத் துறையினர்.
பொறியாளர்களின் அதீத திறமையால் இந்த விமான நிலையமே சொர்க்க பூமி போல ஜொலிக்கிறது.
இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆனது, ஏனெனில், குன்றுகளை தரைமட்டமாக்கி, ஆறுகளை மடைமாற்றிவிட்டு, நிலப்பரப்புகளை இணைக்க பாலங்கள் அமைத்து இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளதாம்.
ஒரு முனையம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் நிலையில் இதன் காரணமாக, ஏற்கனவே இருக்கும் சத்திரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்து, நிலைமை எதிர்பார்த்தபடி மாறும் என கூறப்படுகிறது.
ஆண்டொன்றுக்கு 5.4 கோடி பயணிகள் வரும் மும்பை விமான நிலையம் மிகப்பெரிய வரிசைகள், பயங்கர நெரிசல், தாமதப் பயணயங்களுக்கான அடையாளமாக இருந்து வருகிறது. அந்த நிலை இனி மாறம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதும், விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.