உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க போட்டி அரசியல் கட்சிகள் ரகசிய கூட்டணியை உருவாக்குவதாக்க அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.
லக்னௌவில் பேரணி ஒன்றில் உரையாற்றிய மாயாவதி கூறியதாவது,
உ.பி.யில் 2007ல் தனது கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோது சாதி மற்றும் முதலாளித்துவ சக்திகளைப் பயமுறுத்தியது. அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னேற்றத்தைத் தடுக்க ஒன்றிணைந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு, மக்களின் நலனுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாடுபட்டது. நாடு முழுவதும் எங்கள் செல்வாக்கு அதிகரித்தது.
இதைப் பார்த்து, அனைத்து சாதிய, குறுகிய மனப்பான்மை மற்றும் முதலாளித்துவக் கட்சிகளும் ரகசியமாகக் கைகோர்த்து, எங்கள் கட்சி மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக் கொண்டன.
பகுஜன் கட்சியின் வெற்றிக்குப் பிறகு, மற்ற எதிர்க்கட்சிகள் மிகவும் பயந்து, மீண்டும் ஆட்சிக்கு வரவோ அல்லது நாடு முழுவதும் விரிவடையவோ முடியாத நிலையை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற போட்டி கட்சிகள் ரகசியமாக ஒன்றிணைந்து பகுஜன் சமாஜ் கட்சியைத் தடுத்த பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்ற இடமெல்லாம், அவர்கள் எங்களைத் தோற்கடிக்க தங்கள் வாக்குகளை மாற்றினர் என்று அவர் கூறினார்.
மேலும், தனது ஆதரவாளர்களைக் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், விழிப்புடனும் ஒழுங்கமைக்கப்பட்டும் இருக்குமாறு அறிவுறுத்தினார். பிகார் மற்றும் பிற மாநிலங்கள் உள்பட வரவிருக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவர்களை ஒற்றுமை மற்றும் கடின உழைப்பால் தோற்கடிக்க வேண்டும் என்று நான்கு முறை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி கூறினார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தலில் 4 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள்: வினய் குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.