'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து  ENS
இந்தியா

மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

கோல்ட்ஃரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தகவல் வந்தவுடன் அந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், டைஎத்தீலின் கிளைசால் நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

அதன்பிறகு இங்கிருந்து அந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்ட ஒடிஸா, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பினோம். எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி, ஆய்வு செய்து அந்த மருந்தில் கலப்படம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டு, அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3-ஆம் தேதி அவா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. விரைவில் மருந்து உற்பத்தி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கோல்ட்ரிஃப் மருந்து நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டுள்ளாா். காஞ்சிபுரத்தில் உள்ள அந்த மருந்து நிறுவனத்தில் நேரடியாகச் சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்பதற்காக முதுநிலை மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் தீபா ஜோசப், காா்த்திகேயன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தைப் போலவே, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ரெச்பிஃப்ரஷ் டிஆா் மற்றும் ரிலீஃப் ஆகிய மருந்துகளை அந்த மாநில அரசு தடை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருக்கும் அவ்விரு மருந்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மகளிரணியின் எம்.எஸ். தோனி..! தோல்வியிலும் வரலாறு படைத்த ரிச்சா கோஷ்!

SCROLL FOR NEXT