முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 
இந்தியா

பிகார் தேர்தல்: முதல் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

121 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 121 இடங்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (அக். 10) முதல் வேட்பாளர்கள் (அக். 17) வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மேலும் அத்தகைய ஆவணங்களின் பரிசீலனை அடுத்த நாள் நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 20.

பாட்னா, தர்பங்கா, மாதேபுரா, சஹர்சா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், முங்கர், ஷேக்புரா, நாளந்தா, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் முதல் கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிகாரில் கடந்த ஜூன் 24-இல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டு புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டது.

”பிகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில், 2 எஸ்.டி., 38 எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும். ஆண்கள் 3.92 கோடி, பெண்கள் 3.50 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 1,725 என மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

243 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் என தேர்தல் பணிக்காக மொத்தம் 8.5 லட்சம் பேர் பணிபுரியவுள்ளனர்.

இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 ஆம் தேதி 122 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

Filing of nomination papers began on Friday for the elections to 121 seats in the first phase of the Bihar assembly polls, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலைக்குயில்... அனைரா குப்த!

பிகாரில் 2 ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பாரிஸ் நகர வீதிகளில்... ஐஸ்வர்யா அர்ஜுன்!

சிரித்தாள் தங்கப் பதுமை... அனுஷ்கா!

சந்தோஷ விடியல்... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT