மத்திய பிரதேசத்தில் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, குறிப்பிட்ட அந்த இருமல் மருந்து விற்பனைக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் அண்மையில் சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவா்கள் இருமல் மருந்து உள்ளிட்ட வழக்கமான மருந்துகளைப்(கோல்ட்ஃரிப் இருமல் மருந்து) பரிந்துரைத்துள்ளனா். ஆனால், அந்த மருந்தை உட்கொண்ட சில நாள்களில் குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.
இதனையடுத்து, இருமல் மருந்து நிறுவன உரிமையாளா் உள்பட 3 போ் வியாழக்கிழமை தமிழகத்தில் கைது செய்யப்பட்டனா். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்த நிலையில், மேற்கண்ட இருமல் மருந்து விற்பனைக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து, தில்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த அறிவுறுத்தல்களை அனைத்து விற்பனையாளர்களும் உடனடியாக அமல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோல, பொது மக்களும் இந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.