பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் அளித்துள்ளார்.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கு இருவரும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
பிரதமர் மோடியைச் சந்தித்த செர்ஜியோ கோர், பிரதமர் மோடி அமெரிக்கப் பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் உரையாற்றியப் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். அதில், அதிபர் டிரம்ப்பின், “பிரதமரே... நீங்கள் மிகச் சிறந்தவர் - பிஎம் யூ ஆர் கிரேட்” என்றும் கையொப்பமிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக பதற்றத்துக்கு மத்தியில் இருவரும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனால், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
செர்ஜியோவின் பதிவை மறு பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதரை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அவரால் இந்தியா - அமெரிக்கா இடையே வியூக ரீதியில் கூட்டாட்சி வலுபெறும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் சந்தித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.