தலைநகர் தில்லியில் முந்திரி திருட்டு வழக்கில் 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு தில்லியின் நியூ கோண்ட்லி பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து 440 கிலோ முந்திரி திருடுபோனதாக கடையின் உரிமையாளர் போலீஸில் புகார் அளித்தார். கடையின் கிடங்கில் இருந்து சுமார் 600 கிலோ எடையுள்ள 60 வாளி முந்திரி திருடுபோனது தெரிய வந்தது.
அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடையின் ஊழியரான சாகர் கான்தான் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் சச்சினுடன் சேர்ந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ளார்.
இதையடுத்து தப்பிக்க முயன்ற சாகர் கானை ஹோட்டல் அருகே போலீஸார் கைது செய்தனர். மேலும் கரோலி கிராமத்தில் சச்சின் கைது செய்யப்பட்டார்.
கானிடமிருந்து 39 வாளிகள் (390 கிலோ) முந்திரியையும், மண்டாவலியில் உள்ள உள்ளூர் கடை உரிமையாளரான நிதின் குப்தாவிடமிருந்து ஐந்து வாளிகள் (50 கிலோ) முந்திரியையும் போலீஸார் மீட்டனர்.
மீதமுள்ள சரக்குகளை அவர் விற்றதாக ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் இதுவரை டெம்போ உரிமையாளர் சாகர் கான் (22) முகேஷ் சாஹு (24), திருட்டுக்கு உதவிய பள்ளி டாக்ஸி ஓட்டுநர் சச்சின் (22) மற்றும் திருடப்பட்ட பொருட்களைப் பெற்ற உள்ளூர் கடை உரிமையாளர் நிதின் குப்தா (35) ஆகியோர் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.