பிரதமர் மோடியுடன் கனட அமைச்சர் 
இந்தியா

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்தின் இந்திய பயணம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார் கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இந்தாண்டு மே மாதம் கனடா வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அனிதா ஆனந்த் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

பிரதமர் மோடி வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை வரவேற்றார். அவரது வருகை இருதரப்பு கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். புதிய முயற்சிகளுக்குப் பங்களிக்கும் என்று வேர் கூறினார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றபோது அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்ததை மோடி நினைவுகூர்ந்தார். வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் குறிப்பிட்டார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Canada's Foreign Minister Anita Anand met Prime Minister Narendra Modi here on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதர்வாவின் இதயம் முரளி! தங்கமே தங்கமே பாடல் வெளியீடு!

100 கிழவிகளின் மாதிரி... தாய் கிழவி படத்தில் ராதிகாவின் ஒப்பனை!

”NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள்”: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் Exclusive

உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டு வருவாய் உயர்வு!

SCROLL FOR NEXT