தில்ப்ரீத் சிங் பஜ்வா (23 வயது) பஞ்சாபில் பிறந்த இவர் கனடா டி20 அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
இவர் பேட்டி ஒன்றில், “எங்கள் நாட்டுக்கு கிரிக்கெட் உலகிடம் இருந்து அனுதாபம் தேவையில்லை, அனுபவம் தரும் இருதரப்பு போட்டிகள் அதிகமாக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக பங்கேற்ற கனடா அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கிறது.
நேற்று யுஎஇ உடன் நடந்த போட்டியில் கடைசி 2 பந்துகளில் தோல்வியுற்றது. இது குறித்து அவர் பேசும்போது கூறியதாவது:
உள் அரங்கம், யுவராஜ் சிங்கிற்கு நன்றி
யுவராஜ் சிங்கிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவர் கொண்டுவந்த கனடா சூப்பர் 60 இல்லாமல்தான் நாங்கள் மிகவும் பின் தங்கியிருந்தோம்.
ஜிடி20 (குளோபல் டி20 கனடா) கடந்தாண்டு இல்லை. யுவராஜ், அபிஷேக் ஷா இருவரது முயற்சியால் வட அமெரிக்காவுக்கு லீக் கிரிக்கெட் கொண்டுவரப்பட்டது.
முதல்முறையாக கிரிக்கெட்டை உள் அரங்கில் விளையாடினோம். மழை, பனி என எதுவாக இருந்தாலும் தடையில்லாமல் விளையாடினோம்.
கிரிக்கெட்டுக்காக உள் அரங்கம் பெற்றுள்ளதை நினைத்து ஒரு கனடாவின் குடிமகனாக எனக்குப் பெருமையாக இருக்கிறது.
கனடாவில் நல்ல திறமைசாளிகள் இருக்கிறார்கள்; ஆனால்,...
ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வந்த பிறகு தனியார் நிறுவனங்கள் முன் வந்தன. தற்போது, ஐபிஎல் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது எனப் பாருங்கள்.
கனடா கிரிக்கெட் வாரியம் மட்டுமே எதுவும் செய்ய முடியாது. தனியார் நிறுவனங்கள் எங்களுக்குத் தேவை. அவர்கள் வருகையால் நாங்கள் மேலும் முன்னேற்றம் பெறுவோம்.
எங்களுக்கு திறமையில் வித்தியாசம் இல்லை. எங்களால் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்பது மட்டுமே பிரச்னை. கனடாவில் நல்ல திறமைசாளிகள் இருக்கிறார்கள்.
7 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை
உலகக் கோப்பைக்குத் தேர்வானதும் எங்களுக்கு 7 மாதங்கள் இடைவெளி இருந்தன. ஒரு டி20 தொடரும் விளையாடவில்லை. நேரடியாக உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறோம்.
இலங்கை ஏ அணியுடன் பயிற்சி செய்தோம். தெ.ஆ. உடன் எங்களது அனுபம் அற்ற தன்மை வெளிப்பட்டது. இருந்தும் எங்கள் பந்துவீச்சாளர்கள் இறுதியில் நன்றாகப் பந்துவீசினார்கள்.
அணியின் பயிற்சியாளர் பேசினால், வீரர்கள் உத்வேகம் அடையமாட்டார்களா? கௌதம் கம்பீர் பேசினால் இந்திய வீரர்கள் உற்சாகம் அடைகிறார்கள். அதுபோல் எங்களிடமும் ஒரு வீரர் வந்து பேசினால் நாங்களும் உற்சாகம் அடைவோம்.
இந்திய வீரர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது பேசும்போது நிறைய கற்றுக்கொள்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.