தற்காப்பு அல்ல தாக்குதல்தான்... குஜராத்தை எச்சரித்த ஆர்சிபி கேப்டன்!
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டி குறித்து...
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில், “நாங்கள் பவர்பிளேவில் தற்காத்தல் முறையில் பந்துவீச மாட்டோம்; தாக்குதல் மனநிலையில்தான் பந்துவீசுவோம்” எனக் கூறியுள்ளார்.
இன்றிரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் ஆர்சிபி அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் கோப்பை வென்ற ஆர்சிபி நடப்பு சீசனிலும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த நிலையில், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
டாப் 2வில் இடம்பிடித்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன. குவாலிஃபயர் 1ல் வென்று நேரடியாக இறுதிக்கு முன்னேற வேண்டும். ஆனால், உண்மையில் இது குறித்து நாங்கள் விவாதிக்கவே இல்லை.
சீசன் தொடக்கத்தில் இருந்தே எங்களது கவனம் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமே. இந்தப் போட்டியில் வென்றால், இறுதிப் போட்டிக்கு முன்பாக எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைக்கும். அனைவருமே அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
எங்களது பலமே பந்துவீச்சுதான். பவர்பிளேவில் புவனேஷ், ஹேசில்வுட் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். அதுதான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நாங்கள் இங்கு வருவது தற்காக்க அல்ல தாக்குதல் மனநிலையில்தான் என்பது எங்களது அணியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் எடுக்க நினைக்கிறோம். அதைதான் இதுவரை செய்திருக்கிறோம். ஒரே விஷயத்தையே பலமுறை மீண்டும் மீண்டும் செய்திருக்கிறோம். அதைதான் புவனேஷ், ஹேசில்வுட், ரஷிக் சலாம் செய்துள்ளார்கள். இதைத் தொடர்வோம் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
'We are here to attack' - Patidar on RCB's playoff mindset
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.