தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்தபோது ரூ. 2 லட்சம் மதிப்புடைய ரூ. 2,000 தாள்கள் கிடைத்த சம்பவம் வீட்டினருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பண்டிகை காலங்களையொட்டி வீட்டை சுத்தம் செய்வது இந்திய குடும்பங்களில் வழக்கமான ஒன்று. இந்த ஆண்டு வரும் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இதனையொட்டி வீட்டை சுத்தம் செய்யும் பணிகளில் குடும்பத் தலைவிகள் ஈடுபட்டு வரும் நிலையில், துடைப்பம், தூசிகளுக்கு மத்தியில் ஒரு குடும்பத்துக்கு மட்டும் லட்சங்களில் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.
தொலைக்காட்சிப் பெட்டியை சுத்தம் செய்யும்போது, டிடிஎச் பெட்டியில் ரூ.2000 தாள்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் என அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரெடிட் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், ''எனது தாய் வீட்டை சுத்தம் செய்யும்போது ரூ.2 லட்சத்தை கண்டறிந்துள்ளார். எல்லாம் பழைய ரூ. 2 ஆயிரம் தாள்கள். பணமதிப்பிழப்பு காலத்தில் எனது தந்தை டிடிஎச் பெட்டியினுள் வைத்திருக்கலாம். இதனை எங்கள் தந்தையிடம் கூட இன்னும் நாங்கள் தெரிவிக்கவில்லை. இதனை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்வது எனப் பரிந்துரை செய்யுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் வீட்டை சுத்தம் செய்தபோது கண்டெடுத்த பணத்தையும் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.
அவரின் இந்தப் பதிவில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை புழகத்தில் இருந்து ஆர்பிஐ கட்டுப்படுத்தி வருகிறது. நாட்டில் 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் சில 2023 அக். 7 முதல் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை ஆர்பிஐ திரும்பப் பெற்று வருகிறது. தற்போதும் கூட நியமிக்கப்பட்ட 19 ஆர்பிஐ அலுவலகங்களில் ரூ.20,0000 மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளலாம்.
இதையும் படிக்க | கரூர் பலி: சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் நீதிபதி! யார் இந்த அஜய் ரஸ்தோகி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.