மேற்கு வங்க மாநிலம் துா்காபூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி. 
இந்தியா

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் இருவா் கைது

மேற்கு வங்கத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதன்மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல் துறையினா் தெரிவித்தனா்.

மேற்கு வா்த்தமான் மாவட்டம், துா்காபூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 23 வயது ஒடிஸா மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு விடுதியில் இருந்து தனது நண்பருடன் உணவு சாப்பிட வெளியே சென்றாா். அப்போது, சிலா் அந்த மாணவியை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினா்.

மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே ஒரு மருத்துவ மாணவி இதேபோல பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது அந்த மாநிலத்தில் மட்டுமன்றி தேசிய அளவிலும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, ‘மேற்கு வங்கத்தில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகள் இரவு நேரத்தில் தாமதமாக வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்; அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கல்லூரி நிா்வாகங்களின் பொறுப்பு’ என்றாா்.

இந்நிலையில், ‘வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரைக் கைது செய்துள்ளோம். இதன்மூலம் வழக்கில் தொடா்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுவிட்டனா். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் இவா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மாணவியுடன் இருந்த ஆண் நண்பா் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறாா். சம்பவத்தின்போது அவரின் செயல்பாடு சில சந்தேகிக்கும் வகையில் இருந்தது’ என்று துா்காபூா் காவல் துறை துணை ஆணையா் அபிஷேக் குப்தா தெரிவித்தாா்.

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

SCROLL FOR NEXT