கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் Photo : X / Goa cm
இந்தியா

கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் காலமானார்!

கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் மறைவு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கோவா வேளாண் துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ரவி நாயக் புதன்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79.

கோவா போண்டாவில் உள்ள இல்லத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே ரவி நாயக் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரவி நாயக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை முதல்வர்

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் 1980 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரவி நாயக், பின்னர் காங்கிரஸில் இணைந்தார்.

1991 மற்றும் 1994 என இரண்டுமுறை மொத்தம் 850 நாள்கள் முதல்வராக பணியாற்றியுள்ளார். 1998 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவா காங்கிரஸின் மூத்த தலைவராக அறியப்பட்ட ரவி நாயக், கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

முதல்வர் பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.

Former Goa Chief Minister Ravi Naik passes away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது: அகமதாபாத் விமான நிலைய நிர்வாகம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!

வடகிழக்குப் பருவமழை: நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இம்மாதமே பெறலாம்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதீஷ் குமார்!

SCROLL FOR NEXT