பிரதமர் நரேந்திர மோடி. (கோப்புப் படம்)
இந்தியா

"ஒருங்கிணைந்த என்டிஏ, ஒருங்கிணைந்த பிகார்': தேர்தல் முழக்க வாசகத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடி

"ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ), ஒருங்கிணைந்த பிகார் - சிறந்த நிர்வாகத்தின் அரசு மீண்டும் ஆட்சியமைக்கும்' என்ற பிகார் தேர்தலுக்கான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் முழக்க வாசகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அறிமுகம் செய்தார்.

தினமணி செய்திச் சேவை

"ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ), ஒருங்கிணைந்த பிகார் - சிறந்த நிர்வாகத்தின் அரசு மீண்டும் ஆட்சியமைக்கும்' என்ற பிகார் தேர்தலுக்கான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் முழக்க வாசகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அறிமுகம் செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகார் மாநில பாஜக தொண்டர்களுடன் "நமோ' செயலி வழியில் கலந்துரையாடியபோது இந்த முழக்க வாசகத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிகார் மக்கள் இந்த முறை இரண்டு தீபாவளியைக் கொண்டாட உள்ளனர். முன்னதாக, நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி விகிதம் 4-லிருந்து இரண்டு விகிதங்களாகக் குறைக்கப்பட்டபோது மக்கள் தீபாவளி போல கொண்டாடினர். தற்போது, நவம்பர் 20-ஆம் தேதி (பிகாரில் தேர்தல் முடிவு தினம்) தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்ளனர்.

பிகாரில் என்டிஏ கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் உட்பட்ட குடும்பங்களை தொண்டர்கள் சந்தித்து, மத்திய அரசு மற்றும் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு அறிமுகம் செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உட்கொண்ட மேலும் 2 குழந்தைகள் இறப்பு; உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு

தங்கம் விலை ரூ. 95,000-ஐ கடந்தது! புதிய உச்சம்...

மேட்டூர் அணை நிலவரம்!

தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்

SCROLL FOR NEXT