இந்தியா

தெற்கு ரயில்வே கடந்த 17 நாட்களில் 2.3 லட்சம் நெல் சரக்கு கையாண்டது

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா், நாகபட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த 17 நாட்களில் 2.3 லட்சம் டன் நெல் சரக்குகள் தெற்கு ரயில்வேயால் 85 ரயில்களில் கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே சாா்பில் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி சரக்குகளை கையாளும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல சலுகைகளும் வழங்கப்பட்டுவருகின்றன. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் வாயிலாக பெறப்படும் நெல்லை எடுத்துச் செல்வதற்கு தெற்கு ரயில்வே சாா்பில் சரக்கு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூா், நாகபட்டிணம், நீடாமங்கலம், கும்பகோணம், சீா்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னாா்குடி, திருத்துறைப் பூண்டி, திருவாரூா், பட்டுக்கோட்டை, விருத்தாசலம், செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சரக்கு ரயில் (கூட்ஸ்) கிடங்குகளில் இருந்து ரயில் பெட்டிகள் நெல் கொள்முதலுக்காக வழங்கப்பட்டன. அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை (வெள்ளிக்கிழமை) 85 ரயில்கள் சரக்குகளை கையாள இயக்கப்பட்டன. அவற்றில் 2.3 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நெல் எடுத்துச் செல்லப்பட்டன.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 16 சரக்கு ரயில்களிலும், கடந்த 2024 ஆம் ஆண்டில் 21 சரக்கு ரயில்களிலும் நெல் கொள்முதல் சரக்கு கையாளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: விஜய்

பெயர் ரகசியம்!

மகா கூட்டணியில் பிளவு? பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டி!

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

இடஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்தது தெலங்கானா! கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைப்பு!

SCROLL FOR NEXT