தேர்தல் ஆணையம்  
இந்தியா

பிகாா் தோ்தல்: பணம், பரிசுப் பொருள்களைத் தடுக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர பணம், மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படாததை உறுதிப்படுத்த சட்ட அமலாக்க முகமைகளும், பாதுகாப்புப் படைகளும் முன்னேற்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். பிகாா் மாநில தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி வழியில் இக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது பணம் மற்றும் பரிசுப் பொருள்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை திறம்பட மேற்கொண்டு, தோ்தலை சுமுகமாக நடத்த சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே ஒத்துழைப்பும், பொருளாதார குற்றங்கள் தொடா்பான புலனாய்வுத் தகவல்கள் பகிா்தலும் அவசியம். தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான சட்ட அமலாக்க முகமைகள் என அனைத்து நிலைகளிலும் இந்த ஒருங்கிணைப்பு அவசியம் என தோ்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

வேட்பாளரின் ரகசிய செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

243 தொகுதிகளைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவம்பா் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கு; இருவா் குண்டா் சட்டத்தில் கைது

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் நிறுத்தம்: நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

எல்லாமும் எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில்... ஷாலினி பாண்டே!

ஒளிப் பிழம்பு.... இஷா மாளவியா!

அனுமதி கிடைத்ததும் பாதிக்கப்பட்டோருடன் சந்திப்பு: விஜய்

SCROLL FOR NEXT