பிகார் பேரவை 
இந்தியா

ஓராண்டுக்கு வெறும் 29 நாள்கள் மட்டுமே நடந்த பிகார் பேரவை!

ஓராண்டுக்கு வெறும் 29 நாள்கள் மட்டுமே பிகார் பேரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தின் 17வது சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் குறித்த தரவுகள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியிருக்கிறது.

கடந்த 17வது பிகார் சட்டப்பேரவையில் ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 147 நாள்கள்தான் பேரவை நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. 15 கூட்டத் தொடர்களில் ஒரு ஆண்டுக்கு 29 நாள்கள் மட்டுமே எம்எல்ஏக்கள் பேரவைக்கு வந்துள்ளனர். மொத்தமாக 22,500 கேள்விகளை எம்எல்ஏக்கள் எழுப்பியிருக்கிறார்கள். அதிகபட்சமான கேள்விகள் கல்வி மற்றும் சுகாதாரம், ஊரக வேலை வாய்ப்பு குறித்தவை.

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் பிகார் பேரவையில் 99 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்துமே அறிமுகப்படுத்திய அதே நாளில் நிறைவேற்றப்பட்டுள்ளதுதான் ஆச்சரியம்.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு, பிகார் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இந்த தகவல்களை பெற்றுள்ளது.

ஓராண்டுக்கு 365 நாள்களில் சராசரியாக வெறும் 29 நாள்கள் மட்டுமே பிகார் சட்டப்பேரவைக் கூடியிருக்கிறது என்பது அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறதோ இல்லையோ, தகவலை அறியும் எவர் ஒருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.

பிகாரில் வரும் நவம்பர் மாதம் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்த ஐசிசிக்கு நன்றி: ஸ்காட்லாந்து

திமுகவை வீழ்த்த உள்ள ஒரே தலைவர் விஜய்: செங்கோட்டையன்

சசிகுமார் நடிப்பில் திரைப்படமாகும் நாவல்!

பிபிஎல் இறுதிப் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவாரா புதிய பிரட் லீ?

தவெக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது! விசில் அடித்து விஜய்க்கு வரவேற்பு!

SCROLL FOR NEXT